இன்று காய்கறிகளை ப்ரெஷ் ஆக வாங்க முடிவதில்லை. பல்வேறு உரங்களும் பயன்படுத்தப்படுவதால் உடல் நலன்தான் கெடுகிறது. விலையும் அதிகமாக உள்ளது. மொட்டை மாடியில் சிறிது இட வசதியுள்ள எவரும் இது போல் காய்கறித் தோட்டம் அமைக்கலாம். மொட்டை மாடியில் மண்ணை கொட்டினால், கட்டுமானம் பாதிக்கப்படும். அதற்கு பதிலாக பச்சை நிற தார்பாலின் பைகளை பயன்படுத்துகிறேன். சிறிதும் பெரிதுமாக நியாயமான விலையில் கிடைக்கிறது. இதில் மண்ணுக்கு பதிலாக தென்னை நார் கழிவுகளை கொட்டி காய்கறி நாற்று நடலாம். தென்னை நார் கழிவுகளுக்கு மண்ணைப் போல் எடையில்லை. அங்குமிங்கும் எளிதாக தூக்கிச் செல்லலாம். நார்க் கழிவில் உள்ள நார்கள் காய்கறி செடியின் வேர்களை இறுக்கிப் பிடித்துக் கொள்வதால், மண்ணில் வளர்வதைப் போல் செடிகள் “ஸ்ட்ராங்’ ஆக வளர்கின்றன.
“”இதன் அடிப்பகுதி ஓரங்களில் துளை உள்ளதால், ஊற்றும் தண்ணீரால் வேர்கள் அழுகுவதில்லை. காய்ந்த மாட்டுச் சாணம் மற்றும் வீட்டு சமையலறையில் மீதமாகும் காய்கறிக் கழிவுகள்தான் உரம். இதனால் ஒரு செடியில் 15 கத்தரிக்காய் வரை கிடைக்கிறது. இயற்கையான முறையில் விளைவிப்பதால் சுவைக்கும் குறைவில்லை. நமக்குத் தேவையான காய்கறிகளை நாமே விளைவித்து சாப்பிடுவதில் கிடைக்கும் திருப்தியும், சந்தோஷமும் தனிதான்
Post a Comment